ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
    ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
    மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
    ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.
  • 2. ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும்
    ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும்
    ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று)
    ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.
  • 3. சிவமாகி மும்மலம் முக்குணஞ் செற்றுத்
    தவமான மும்முத்தி தத்துவத் தைக்கியத்
    துவமா கியநெறி சோகம்என் பார்க்குச்
    சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.
  • 4. சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
    சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த
    சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
    பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.