
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
பதிகங்கள்

சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.
English Meaning:
The Three Muktis Are Direct Experiences With Siva-FormJiva-Mukti is the Atita (Beyond Consciousness State);
Para-Mukti is Upasanta (Divine Peace);
Siva-Mukti is Ananda (Divine Bliss);
All three are Svarupa Muktis
That from Nadanta branch
Where Pranava (Aum) as letters Three (A,U,M) are.
Tamil Meaning:
மும்முத்திகளுள் முதலாவதாகிய சீவன் மும்முத்தி யாவது, உலகத்தில் இருப்பினும் உலகத்தைக் கடந்து நிற்கும் நிலையாம். எனவே, `இஃது உடம்புள்ள பொழுதே நிகழ்வது` என்பது அறியப்படும். நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலியனவாம். மூன்றாவதாகிய பரமுத்தியாவது, உயிர் முன்பு இருந்த பாச நிலைகள் முற்றும் அற்று நிலையான அமைதியைப் பெறும் நிலையாகும். (ஆகவே, இஃது உடம்பு நீங்கிய பின்னர்ப் பெறப்படுவதால் விளங்கும். பிறர், `விதேக முத்தி` என்பர். இந்நிலையில், `சிவானந்தத்தை நாம் அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வும் இன்றி, அந்த ஆனந்தத்துள் மூழ்கியிருக்கும் நிலையாதல் பற்றி இதனை, `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். ஆனந்தாதீதம் ஆனந்தத்தில் ஆதீதம். இவ்வாறன்றி, உலக இன்பத்தில் தோயாது, சிவானந்தத்திலே தோய்தல் சிவமுத்தியாம். (எனவே நின்மலாவத்தையில் துரியாதீத நிலையாம்.) இவ்வாறு மூன்று நிலைகளில், உயிர் மூன்று தன்மைகளை உடையதாக, முத்தி மூன்று வகையாய் இருக்கும். இவற்றுள் சொல்லிறந்த முத்தியாகிய பரமுத்தியே நாதாந்த முத்தியாகக் கருதப்படும்.Special Remark:
``அதீதம்`` என்பது, `கடந்தது` என்னும் பொருளது. ஆனந்த அனுபவத்தை, ``ஆனந்தம்`` என்றார். `தாரகத்தில்` என்பது இடைக்குறைந்து நின்றது. தாரகம் - பிரணவம். இது அனைத்துச் சொற்களும் ஆதல் அறிக. ஓவுறு தாரகம் - தாரகம் ஓவிய (நீங்கிய) நிலை. உள்ளும் - உள்ளப்படும். என மாறிக் கூட்டியுரைக்க.இதனால், `மும்முத்திகளாவன இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage