ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
    பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
    நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
    பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. 
  • 2. கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
    கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
    நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
    சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
  • 3. கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
    மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
    பொய்விட்டு நானே புரிசடை யானடி
    நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.
  • 4. ஆவன ஆவ அழிவ அழிவன
    போவன போவ புகுவ புகுவன
    காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
    ஏவின செய்யும் இலங்கிழை யோனே.