
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
பதிகங்கள்

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறுந் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க் கிடம்மிடை ஆறங்க மாமே.
English Meaning:
Nine Abodes of SivadityaThe divine Fire, Sun and Moon,
The earth, water, fire, wind and space
And the creation countless
These the abodes ancient of Siva are;
The Five Gods, (Brahma, Vishnu, Rudra, Mahesa, Sadasiva)
Are in the Vedas that has Angas six.
Tamil Meaning:
தெய்வச் சுடர் அங்கி, வேள்வித் தீ ஞாயிறுமுதல் வானகம் ஈறாயினவும் ``பல்லுயிர்`` என்றதும் வெளிப்படை. ஐவர், பிரமன் முதல் சதாசிவன் ஈறானவர். அவர்க்கு இடம் ஆவன சுவாதிட்டானம் முதல் ஆஞ்ஞை ஈறாய் உள்ள ஐந்து ஆதாரங்கள். ஆறு அங்கம் ஆஞ்ஞையிலிருந்து கீழ்நோக்கி எண்ண ஆறாவதாகும் மூலாதாரம். சைவப் பெரும்பதி - இவை யாவும் சிவத் தலங்களாகும்.Special Remark:
``சைவப் பெரும்பதி`` என்றதை ``ஆம்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `இவை சிவத்தலங்கள்` என்றது, `இவ்விடங்கள் சிவனைக் கண்டு வழிபடுதற்குரிய இடங்கள்` என்றபடி எனவே, இவ்விடங்களில் சிவனைக் கண்டு வழிபட அவன் ஆதித்தனாய் உயிரினுள் விளங்குவான்` என்பது கருத்து. மிடை ஆறு அங்கம் - அவ்வைந்தோடு சேர்ந்து ஆறாவதாகின்ற உறுப்பு.இதனால், சிவாதித்தன் உதயம் செய்தற்கு வாயில் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage