
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
பதிகங்கள்

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
English Meaning:
Siva is Sun of JnanaThe darkness of contending Pasa,
And the Ignorance vast,
These flee fast,
Before the Jnana Light of Siva,
Even as when the luminous Sun rises,
The murky darkness, before him, flees.
Tamil Meaning:
உயிர் அடைந்த ஞான ஒளியினுள்ளே வந்து எழு கின்ற சிவத்தினது ஒளியால் அக ஒளியாகிய அறிவை மறைந் திருந்த அக இருளாகிய ஆணவ மலமும், அதனால் விளைந்த அறியாமையும் இராக்காலத்திலே பொருந்தி எழுகின்ற அருணோதயத்தால் அதற்கு முன் திணிந்திருந்த இருள் நீங்குதல் போல நீங்கியொழியும்.Special Remark:
``சென்றிடும்`` என்பது பெயரெச்சம். `ஞானத்துள் சென்றிடும் சிவத்தின் பிரகாசத்தால்` எனக் கூட்டியுரைக்க. `அருணோ தயத்தால்` என உருபு விரிக்க. தெளிவு பற்றி எதிர்காலத்தை இறந்த காலமாக்கி, ``தொலைந்தது`` என்றார். ஏகாரம் தேற்றம். பொருளில் ``அஞ்ஞானமும்`` என்றதற்கு ஏற்ப உவமையிலும் `குருட்டுத் தன்மையும்` என்பது வருவிக்க.இதனால், அக இருளாகிய ஆணவ மலம் சிவாதித்தனது ஒளியாகிய அக ஒளியாலல்லது நீங்காமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage