
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
பதிகங்கள்

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
English Meaning:
Stretch the hands over the calf of leg,Lift the mouth upward,
Fix thy gaze on tip of nose,
Thus do thou Simhasana posture.
Tamil Meaning:
`குக்குடாதனத்தை வேறுபடுக்கச் சிங்காதனமாம்` என்கின்றார்.இருகைகளையும் இருமுழந்தாள்களின் இடையே புகச் செலுத்தி இருபாதங்களிலும் படுமாறு நீட்டி, வாயைத் திறந்து கொண்டு, இருகண்களும் மூக்கு நுனியை நோக்க இருக்கின், அவ் இருக்கை சிங்கவடிவிற்றாய், `சிங்காதனம்` என்று பெயர் சொல்லப் படும்.
Special Remark:
`கோடி` என்பது குறுகிநின்றது. செப்பும் - செய்யப் படும்.இதனால், சிங்காதனத்தின் இயல்பு கூறப்பட்டது.
பதுமாதனம் முதலியவற்றை முறையானே கூறிவந்த நாயனார் குன்றக் கூறார் ஆதலால், `கோமுகாதனம், வீராதனம், சுகாதனம், சுவத்திகாதனம்` என்பவற்றையும் கூறிய திருமந்திரங்கள் கிடையாதொழிந்தன என்றே கொள்க. இங்ஙனமாகவே அவற்றது இயல்பு பிற நூல்களின் வழிக் கொள்ளப்படுவனவாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage