
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
பதிகங்கள்

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே.
English Meaning:
Place the right leg over the leftStretch the hands over calf of leg
Sit in posture firm and erect
That indeed is Bhadrasana.
Tamil Meaning:
``பதுமாதனத்தைச் சிறிது வேறுபடுக்கப் பத்திராதனமாம்`` என்கின்றார். பத்திரம் - வாள்.பதுமாதனத்தினின்றும், வலக்காலை எடுத்து இடமுழந்தாள் மேலாக ஊன்றி, இரண்டு கைகளையும் அவ்வலக்கால் முழந்தாளின்மேல் நீட்டி, உடலை நேர் நிற்க நிறுத்தினால், அந்நிலை வாளின் வடிவிற்றாய், `பத்திராதனம்` என்னும் பெயரைப் பெறும்.
Special Remark:
``அது பத்திராசனப் பரிசு பெறும்`` என மாற்றுக. பரிசு - தன்மை; என்றது, பெயரை. இதனைப் பிற நூல்கள் பிறவாறும் கூறும்.இதனால், பத்திராதனத்தின் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage