
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
பதிகங்கள்

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
English Meaning:
When in Siva`s temple worship ceases,Harm befalls the ruler;
Scanty become the rains;
Theft and robbery abound in the land,
Thus did my Holy Nandi declare.
Tamil Meaning:
சிவபெருமானது திருக்கோயில்களில் மேற்கூறிய குறைகள் உளவாகுமாயின், அரசர்கள் வலிமை யிழத்தலேயன்றிப் பிற தீமைகளையும் அடைவர். நாட்டில் விளைவும், பிற வருவாய்களும் குறையும். மாளிகைகளில் கன்னம் இட்டுக் களவாடுதல், கொள்ளை முதலிய பிற களவுகள் மிகுதியாகும். எங்கள் அருளாசிரியராகிய நந்திபெருமான் எங்கட்கு இவ்வாறு எடுத்து அருளிச்செய்தார்.Special Remark:
முதலடி அனுவாதம். கன்னம் இடுதலை முன்னர்ப் பிரித்தமையின், ``களவு`` என்றது பிறவற்றையாயிற்று. `காசினிக்கு` என்பதும் பாடம்.இவ் இரண்டு திருமந்திரங்களாலும் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கட்குக் குறையுண்டாகச் செய்தல் விலக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage