ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம் 

பதிகங்கள்

Photo

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.

English Meaning:
He who gives to God, Guru,
And the Great ones
Who are of passions rid,
Will a Jnani become,
For him is not the burning hell,
That is destined for perpetrators
Of deadly sins five,
Who know not consequences dire.
Tamil Meaning:
குற்றம் நீங்குதற்கு நிமித்தனாய சிவபிரானுக்கும், சிவகுரவர்க்கும், சிவயோகியர்க்கும் குற்றம் கற்பித்து இகழ்பவன் பின் விளைவதை அறியான். அவன் பஞ்ச மாபாதகனிலும் பெரும் பாதகன். அதனால், அவன் பின்னர்ப் பெரு நரகில் வீழ்வான். இகழ்ந்து நிற்கும் அவன் பின்னொரு ஞான்று நல்லறிவைப் பெற்று அவர்களைப் புகழ்ந்து வழிபடுவானாயின், முன் செய்த பாதகத்தினின்றும் நீங்கி நரகம் புகாதொழிவான்.
Special Remark:
முதலடியை மூன்றாமடிக்குப் பின்னர் வைத்து `மா நரகில் போம்` எனவும், `போதம் கற்கப் புகான்` எனவும் கூட்டி உரைக்க.
இதனால், சற்பாத்திரராய் உள்ளாரை அசற்பாத்திரராக இகழ்தலால் வரும் குற்றம் கூறப்பட்டது. இதுவும் தானம் செய்வார்க்கு ஆகாமை பற்றி இவ்வதிகாரத்திற் கூறப்பட்டது.