
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
பதிகங்கள்

கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.
English Meaning:
The Lord splits His power into two,One half He gave to Vishnu as a chakra,
And the other half as body to Sakti,
And thus He remains.
Tamil Meaning:
சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத் தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற்பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.Special Remark:
`அவனது கருணைப்பெருக்கு அளவிடற்கரிது` என்பது குறிப்பெச்சம். `சிவபெருமான்` என்பதுதோன்றா எழுவாயாய் நின்றது. `சத்தி` என்பது மூன்றாம் அடி முதலிலும் சென்று இயைந்தது.இதனால், இயைபு பற்றி சிவபெருமானது வள்ளன்மையின் பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage