
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
பதிகங்கள்

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.
English Meaning:
He bestowed on Damodara the divine discus,But potent for was it for him to hold
And so he prayed to the Lord in fervour
And the Lord split its power in twain.
Tamil Meaning:
சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.Special Remark:
இவ்வரலாறு இந்நூலாலே அறிகின்றோம். `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``செய்தது`` என்றதன்பின், `வியப்பு` என்பது எஞ்சிநின்றது.இதனால், சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரத்தை அளித்ததேயன்றி, அதனைத் தாங்கும் ஆற்றலையும் அளித்தமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage