
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
பதிகங்கள்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே.
English Meaning:
When the swelling deluge at the end of TimeSwallowed the black mountain tops
Hari and Brahma fought
For primacy contending;
And then form amidst the floods arose
As an immeasurable mountain of Light
The One Lord, manifesting the Truth,
And thus blessing both.
Tamil Meaning:
கரிய மலைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு மேல் எழுந்து பரந்த பிரளய வெள்ளத்திடையே மால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.Special Remark:
இவ்வரலாறு மேலே (தி.10 பா. 345) காட்டப்பட்டது. கோ - தலைவன். இது பன்மை ஒருமை மயக்கமாயிற்று. `ஆகிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.இதனால், பிரளய காலத்தில் அயன் மால் இருவரும் இகலினமை இனிது விளங்கக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage