ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
    ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
    தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
    ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.
  • 2. அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
    ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
    திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும்
    அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.
  • 3. நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
    சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
    பவமது தீரும் பரிசும்அ தற்றால்
    அவமதி தீரும அறும்பிறப் பன்றே.