ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தான்வரை வற்றபின் ஆரை வரைவது
    தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
    காமனை வென்றகண் ஆரை உகப்பது
    தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.
  • 2. உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
    கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
    திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
    புரையற் றிருந்தான் புரிசடை யோனே.
  • 3. மனமாயை மாயைஇம் மாயை மயக்க
    மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
    பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
    தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.