ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
    சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
    சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
    சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
  • 2. வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
    நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
    போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
    ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
  • 3. பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்(று)
    உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர்
    தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா
    அரனாய் உலகில் அருள்புரிந் தானே.