ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
    கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
    வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
    இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.
  • 10. காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
    காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
    பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
    ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.
  • 11. ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
    மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
    சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
    ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.
  • 2. கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
    எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
    அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால்
    கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.
  • 3. விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
    விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
    விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
    விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
  • 4. தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
    தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
    தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
    தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
  • 5. விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
    அசும்பினின் நூறும் ஆரமு தாகும்
    பசும்பொன் திகழும் படர்சடை மீதே
    குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.
  • 6. முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
    தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
    ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை
    எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.
  • 7. நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
    நானென்று தானென் றிரண்டில்லை என்பது
    நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
    நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
  • 8. ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
    ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
    ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
    ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.
  • 9. உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
    உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
    உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
    உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.