ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
    பொய்கரி யான புருடாதி பேதமும்
    மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
    செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.
  • 2. அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
    அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு)
    அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு)
    அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
  • 3. படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
    சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
    இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
    நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.
  • 4. அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
    கணுவற நின்ற கலப்ப துணரார்
    இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்
    தணிவற நின்றனன் சராசரந் தானே.