
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 28. புருடன்
பதிகங்கள்

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.
English Meaning:
Seek the Jnana Way of LordTiny unto the seed
Of the spreading banyan tree
Is the atom that is Jiva;
If by fire of Jnana
Your way purifies,
The dark Pasas that malign you
May well driven be;
Seek the Divine way,
The Dancing Lord shows you.
Tamil Meaning:
சிவனது திருவருளாகிய ஒளியினை ஆன்மா, பல கிளைகளும் விழுதுகளுமாய் விரிவடையும் ஆற்றலைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆலம் விதைபோலத் தன்னுள் அடக்குமாற்றால் தன்னை அச்சிவத்திற்கு ஏற்ற தூய இடமாகச் செய்யுமானால், அந்தத் திருவருள் ஒளி துணையாக, துன்பத்தையே தனது இயல்பாகக் கொண்ட ஆணவமாகிய இருளை ஓட்டி, அம்பலத்தில் ஞான நடனத்தைச் செய்கின்ற அப்பெருமான் தரக் கருதும் நல்வழியைத் தான் உணரும் வாய்ப்பு உண்டாகும்.Special Remark:
படர் - படர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். அணு - ஆன்மா. ``அணுவினை`` எனப்பின்னர்க் கூறினாராயினும், `சுடரை அணு தன்னுட் கொண்டு தன்னைத் தூவழி செய்ய` எனக்கூறுதலே கருத்தாதல் உணர்க. `ஓட்டி, நாடல்` என்னும் பயனிலைகட்கு, `தான்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது.இதனால், மேற்கூறிய முறை உவமை காட்டி விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage