
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 28. புருடன்
பதிகங்கள்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்ற கலப்ப துணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்
தணிவற நின்றனன் சராசரந் தானே.
English Meaning:
Jiva and Siva Commingling StandHe within the atom (Jiva),
And the atom (Jiva) within Him
Commingling stand,
They know this not;
The peerless Lord pervades all
Unintermittent, in creation entire.
Tamil Meaning:
முன் மந்திரத்தில், `உயிர் ஆலம் விதைபோலவும், சிவன் அவ்விதையில் அடங்கியுள்ள கிளை முதலியன போலவும் ஆதல் வேண்டும்` என்றது ஒருபுடை உவமையேயன்றி, முற்றுவமை யன்று. மற்று, உண்மை நிலையாது` எனின், `உயிர் மேல்; சிவன் உள்` என்றாயினும், `சிவன்மேல்; உயிர் உள்` என்றாயினும் ஒருபடித்தாக வரையறுத்தல் கூடாதபடி, புறவேற்றுமையே யன்றி, அகவேற்றுமை தானும் இன்றி ஒன்றி நிற்கின்ற கலப்பே உண்மை நிலையாகும். இவ்வுண்மையை உணர்வார் ஒருவரும் இல்லை. இனித் தன்னொப் பில்லாத் தனிப்பெரும் பொருளாகிய சிவன் எல்லாப்பொருளிலும் ஒரு படித்தாக நீக்கமின்றி நிறைந்து நிற்கின் இயங்குவனவும், நிற்பனவு மாய்க் காணப்படுகின்ற உயிர்கள் பலவும் அவனிடத்தில் தத்தமக்கு இயலும் முறையில் கலந்து நிற்கின்றன.Special Remark:
முதல் அடியின் ஈற்றில், `போல` என்பது விரிக்க. கணு - மூங்கிற் கணுவும், கரும்புக் கணுவும். அவை அக வேற்றுமைக்கு உவமையாகக் கூறப்பட்டன. ``இணையிலி`` என்றதனால் அவனது பெருநிலை குறிக்கப்பட்டது. `ஈசன் இணையிலி` என வேறு தொடராக்கி, அதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. தணிவு - நீக்கம். சிவனது பெருநிலை கூறியதனானே உயிர்களது சிறு நிலை பெறுவிக்கப்பட்டது. `இல்லம் முறையில்` என்பது இசையெச்சமாய் நின்றது. தான் - சிவன். `தான் ஆம்` - என்க.இதனால், மேற்கூறிய உவமையால் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage