ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து
    மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி
    ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று
    வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.
  • 2. நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து)
    ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும்
    கூடினர் கூடிக் குறிவழி யேசென்று
    தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.
  • 3. சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
    ஆக்கிய தூலமள வாக்கிஅ தீதத்துத்
    தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
    தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.