ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
    பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
    தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
    நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.
  • 2. தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
    முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
    பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
    சென்னியில் வைத்த திருவரு ளாலே.
  • 3. மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
    மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
    மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்
    தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே.