ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
    கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும்
    திடமது போலச் சிவபர சீவர்
    உடனுறை பேதமும் ஒன்றென லாமே.
  • 2. ஒளியை ஒளிசெய்து ஓம்என் றெழுப்பி
    வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
    வெளியை வெளிசெய்து மேல்எழ வைத்துத்
    தெளியத் தெளியும் சிவபதந் தானே.
  • 3. முக்கா ரணங்களின் மூர்ச்சை தீர்த்(து) ஆவதக்
    கைக்கா ரணமென்னத் தந்தனன் காண்நந்தி
    மிக்க மனோன்மனி வேறே தனித்தேக
    ஒக்கும்அ துன்மனி ஓதுட் சமாதியே.