
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
பதிகங்கள்

முக்கா ரணங்களின் மூர்ச்சை தீர்த்(து) ஆவதக்
கைக்கா ரணமென்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மனி வேறே தனித்தேக
ஒக்கும்அ துன்மனி ஓதுட் சமாதியே.
English Meaning:
Unmani Sakti Takes OverHe ended the pulsations of Karanas
By a sleight of hand, as it were—My Nandi
As the lovely Manonmani (Sakti) left,
Unmani (Sakti) no less lovely entered,
Do take to Her in Samadhi inward.
Tamil Meaning:
ஆறாதாரங்களில் மணிபூரகம், அனாகதம் ஆஞ்ஞை என்னும் மூன்று ஆதாரங்கள் சிறப்புடையன. சுவாதிட்டத் தினின்றும் எழுகின்ற பிராணன் `உதானன்` எனப் பெயர் பெற்று மேலோங்கி இவ்விடங்களில் சென்று ஆஞ்ஞையில் முடியும். அவ்வாறு முடியும்படி அதனை முடித்த பின்பு அவ்வாறு முடித்ததனால் உண்டாகும் பயனைக் கைம்மேற் பலனாக எமக்கு எம் ஆசிரியர் நந்தி பெருமான் அளித்தருளினார். அப்பயன் தான் யாதெனில், ஆஞ்ஞையில் விளங்கிய மனோன்மணி சத்தி அதற்கு மேலே வியாபினி சமனை உன்மனைகளாய்ச் செல்ல, உன்மனாந்தத்தில் சிவத்தோடு ஒன்றும் சமாதி நிலையாம்.Special Remark:
``காரணம்`` இரண்டில் முன்னது இடத்தையும், பின்னது காரணத்தினால் விளைவதாகிய பயனையும் குறித்தன. தீர்த்தல் - முடித்தல். `தீர்த்து, அதனால் ஆவதாகிய அப்பயனைத் தந்தனன் நந்தி` என்க. காண், முன்னிலையசை. ஏக ஒக்கும் அது - செல்லும் நிலையில் முடியும் நிலையாகின்ற அது, `உன் மனியாம்` என்க. ``உள்`` என்றது நுட்பத்தை. இது, பொது யோக சமாதியாகாது, பிராசாத யோக சமாதி யாகலின், ``உட்சமாதி`` என்றார்.இதனால், முன் மந்திரத்தில், ``ஓம்`` - என்று எழுப்பி மேல் எழ வைத்ததலால் பயன் விளைதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage