
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
பதிகங்கள்

ஒளியை ஒளிசெய்து ஓம்என் றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல்எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதந் தானே.
English Meaning:
How to Reach Siva StateBrighten the Light within
To merge in the Light (without);
Through Sound potency in ``Aum``
Rouse Prana breath within
To merge in the breath without (Cosmic Life). Coursing it appropriate upward,
Merge the space within into Space without;
Clear shall you the Siva-State vision.
Tamil Meaning:
பொருள்களை மாறாக உணரும் மயக்கத்தை நீக்கி உள்ளவாறுணரும் தெளிவைத் தருதலால் குண்டலி சத்தி ஒளியெனத் தக்கது. அதனை உலகர் இருளாக்கி வைத்துள்ளனர். அவ்வாறில்லாது அதனை ஒளியாகவே விளங்கும்படிச் செய்தல் வேண்டும். அது பிராணாயாமத்தால் மூலாக்கினியை எழுப்புதலால் உண்டாகும். அஃது உண்டாகும் பொழுதுதான் `வெறுங் காற்று` எனப்படுகின்ற மூச்சு சூரிய சந்திர கலைகளாம் சிறப்பு வளியாகும். அதனை அவ்வாறு செய்து, பயன் கிட்டும்படி கும்பகத்தால் சேமித்து, அதனானே சுழு முனை வழி வழியாயில்லாமல் அடைத்தும், உச்சியில் அருள் ஞானம் விளங்குகின்ற இடம் இடமாய் இல்லாமல் பாழ்படுத்தியும் வைத்திருக்கின்ற நிலையை மாற்றி வழியாகவும், இடமாகவும் செய்து குண்டலியை `ஓம்` என்று எழுப்பி மேற்போய் உலாவச் செய்து தெளி வுணர்வைப் பெற்றால், சிவ சீவர்களது உண்மை நிலை விளங்கும்.Special Remark:
`ஓம்` என்று எழுப்பி - என்றதனால், இவ்யோகம் பிரணவயோகமாதல் விளங்கும்.இதனால், மேற்சொல்லப்பட்ட சிவ பர சீவர் பேதம் விளங்குதற்கு வழி கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage