ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
    அளியுறு வார்அம ரர்பதி நாடி
    எளியனென் றீசனை நீசர் இகழில்
    கிளியொன்று பூசையின் கீழது வாமே. 
  • 2. முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
    விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
    அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
    தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே. 
  • 3. அப்பகை யாலே அசுரருந் தேவரும்
    நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
    எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
    பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே. 
  • 4. போகமும் மாதர் புலவி யதும்நினைந்
    தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
    வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
    நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.