
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
- ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
- ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
- ஆறாம் தந்திரம் - 4.துறவு
- ஆறாம் தந்திரம் - 5.தவம்
- ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
- ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
- ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்
- ஆறாம் தந்திரம் - 10. திருநீறு
- ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
- ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
- ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
Paadal
-
1. அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.
-
2. உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.
-
3. மயலற் றிருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்
தயலற் றவரோடுந் தாமேதா மாகிச்
செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.
-
4. ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.