
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
பதிகங்கள்

ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.
English Meaning:
Why the robe? Seek Nandi Yoga WayWhat avails thee, vain men, these holy robes?
Rein fast the fleeting mare of the twin breath;
And seek Nandi, Our Lord Beloved,
You shall attain sure the Bliss you crave.
Tamil Meaning:
மனிதர்காள், வேடமாத்திரத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்! அந்த நிலை வேண்டுவதில்லை. ஓடுகின்ற குதிரை போல உள்ள பிராணவாயுவை அதன் கடிவாளத்தை இறுகப் பிடித்து ஓட்டுதல் போல இரேசக பூரக கும்பக முறைகளை ஒழுங்காகக் கடைப் பிடித்தலால் அடக்குங்குள் அதனால், மனம் உம் வசப்பட, அது கொண்டு நம் பெருமானாகிய சிவபெருமானை அடைய விரும் புங்கள். அவ்விருப்பம் நிறைவுறுதற்குரிய வழியில் செல்லுங்கள். பின்பு பேரின்பப் பொருளாகிய முதற்பொருளைச் சென்று அடையலாம்.Special Remark:
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``குதிரை, குசை`` என்பன யோகநூற் குறிச்சொற்கள். `திண்ணமாக` என ஆக்கம் வருவிக்க.இதனால், யோக நெறியில் நிற்பின் மனம் அடங்கச் சிவபத்தியும், சிவப்பணியும் வாய்க்க, வேடமும் உண்மைச் சிவ வேடமாய் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage