ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
    மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
    தங்கா வினைகளும் சாரும் சிவகதி
    சிங்கார மான திருவடி சேர்வரே.
  • 2. நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
    நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
    பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
    ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.
  • 3. அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
    விரவு கனலில் வியன்உரு மாறி
    நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
    ருருவம் பிரம உயர்குல மாமே.