
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
பதிகங்கள்

அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி,கண்,
கழிகின்ற கால்,அவ் இரதங்கள், தானம்,
மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.
English Meaning:
When Body Perishes, Nothing There IsThe body perishes;
With it, ears and eyes;
Speech and pulse;
Fasts and gifts;
Nothing left, for dying flesh to lean on.
Tamil Meaning:
நிலையின்றி அழிவதாகிய உடம்பை இடமாகக் கொண்டிருப்பனவே செவி, கண் முதலிய அறிவுப் பொறிகளும், வாக்கு முதலிய செயற்பொறிகளும், அவற்றின்வழி வருகின்ற புல இன்பங்களும், அந்தக் கரணங்களுக்கு வலுவூட்டுகின்ற பிராண வாயு வும், ஒன்றையொன்றோடு முடிந்துவைத்துள்ள நாடிகளும், மற்றும் பல ஆற்றல்களுக்கு உரிய இடங்களும். ஆகவே, உடம்பு அழிந்தால், அவையும் அதனோடே அழிந்தொழிதலால், அழிவதாகிய உடம்பிற்கு அதனை அழியாது நிலைபெறுத்துவதொருதுணை எதுவுமில்லை.Special Remark:
`உடம்பின்கண் ஆகும்` என ஏழாவது விரிக்க. `ஆகும்` என்னும் செய்யுமென்னும் முற்றிற்குச் செவி, கண் முதலியபல பெயர்களும் முடிவாயின. செய்யுள் நோக்கி அப்பெயர்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. கால் - காற்று; பிராண வாயு. இரதம் - சுவை; என்றது இன்பத்தை.இதனால், `தூல தேகம் அழிவுடையதாகலின், அதன் இயல்பை மாற்றுமாறில்லை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage