
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
பதிகங்கள்

பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
English Meaning:
Sublimate Speech and Thought GodwardThe sweet speech, love intones
The loud sound, airy prana articulates
The mind within fleshy body dwells
—All these you upward course (in Yogic way),
No more the thoughts of body be.
Tamil Meaning:
நன்கு அமைந்த உடலால் எழுகின்ற காமமும், பலவகையாகப் பேசுகின்ற பேச்சுக்களும், வெளிச்செல்லும் பொழுது விளங்கி நிற்கின்ற மூச்சும், அம்மூச்சுப் பெரிதாயவழி எழுகின்ற ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் ஆகிய இவைகளையெல்லாம் பிறர், `எங்கே போயின` என்று திகைத்து அண்ணாந்து பார்க்கும்படி உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்தொழியும்.Special Remark:
ஆகவே, `இதனை நிலையுடையதாக எண்ணிப் பற்றுச் செய்தல் நன்றன்று` என்பதாம். முதல் தந்திரத்தில் `யாக்கை நிலை யாமை` கூறியது அறத்தை வலியுறுத்தல் பற்றி. எனினும் ஞானத்தை உணர்த்தும் இவ்விடத்திலும் அதனையுணர்தல் இன்றி யமையாமை பற்றி, வேறொரு கருத்துப் பற்றிக் கூறுகின்றார். `பண்` என்னும் முதல் நிலை, பண்ணி அமைக்கப்பட்ட நல்ல நிலையை ஆகு பெயரால் உணர்த்தும். முறைப்படி அமைந்த இசை `பண்` எனப்படுவதும் அவ் வாற்றாலேயாம். `அந்நிலையில்தான் காமம் உளதாகும்` என்றற்கு, `பண் ஆரும் காமம்` என்றார். `மனத்தையும்` என்றதனோடு இயைய, ஏனை உம்மைகட்கு முன்பும் இரண்டன் உருபு விரிக்க. `அண்ணாந்து பார்த்தல்` என்பது, எங்கும் காணாது திகைத்து நிற்றலைக் குறிக்கும் குறிப்பு. பார்க்க - பார்க்கும்படி.இதனால், `காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage