ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
    சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
    பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
    நீதி யுணர்ந்து நியமத்த னாமே. 

    தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
    வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
    காமம் களவு கொலையெனக் காண்பவை
    நேமியீ ரைந்து நியமத்த னாமே.
  • 2. தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
    சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
    மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
    நிவம்பல செய்யின் நியமத்த னாமே.