ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
    வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
    காசக் குழலி கலவி யொடுங்கலந்
    தூசித் துளையுறத் தூங்காது போகமே. 
  • 10. வெள்ளி யுருகிப்பின் பொன்வழி ஓடாமே
    கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
    கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
    அள்ளிஉண் ணாவில் அடக்கிவைத் தாரே. 
  • 11. வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
    சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
    பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
    வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே. 
  • 12. வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
    நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தம்
    தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
    திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே. 
  • 13. திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
    கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
    வருத்தமு மில்லையாம் மங்கை பங்கற்கும்
    துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே. 
  • 14. எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றால்
    மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
    உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
    விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே. 
  • 15. வெளியை அறிந்து வெளியின் நடுவே
    ஒளியை அறிவின் உளிமுறி யாமே
    தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
    வெளியை அறிந்தனன் மேலறி யேனே. 
  • 16. மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
    மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
    நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
    மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.
  • 17. மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
    பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
    தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
    மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே. 
  • 18. வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
    வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
    வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
    ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே. 
  • 19. உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டால்
    கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
    இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
    பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே. 
  • 2. போகத்தை உன்னவே போகாது வாயுவும்
    மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில்
    சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந்
    தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே. 
  • 20. பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
    தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
    ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
    கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 
  • 3. கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
    மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
    வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத்
    தண்டொரு காலுந் தளராது அங்கமே.
  • 4. அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
    மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
    பங்கப் படாமற் பரிகரித் துத்தன்னைத்
    தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே. 
  • 5. தலைவனு மாயிடுந் தன்வழி ஞானம்
    தலைவனு மாயிடுந் தன்வழி போகம்
    தலைவனு மாயிடுந் தன்வழி உள்ளே
    தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே. 
  • 6. அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
    துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
    நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
    பஞ்ச கடிகைப் பரியங்க யோகமே. 
  • 7. பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
    அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது
    சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
    உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே. 
  • 8. ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆரென்னில்
    விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
    பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
    எண்ணா மென்றெண்ணி இருந்தார் இருந்ததே. 
  • 9. ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
    வாய்ந்த குழலிக்கும் மன்னற்கும் ஆனந்தம்
    ஆய்ந்த குழலியோ டைந்தும் மலர்ந்திடச்
    சோர்ந்தனன் சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.