ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
    நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
    நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
    நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 
  • 2. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
    நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
    நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
    நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
    நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
    நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
    நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
    நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.



  • 3. தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
    ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
    மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
    நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.