
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
பதிகங்கள்

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.
English Meaning:
Unless you in Middle path stand, Wisdom You have not,To those who in Middle path stand, Hell opens not its gate;
Those that in Middle path stand, Heavenly beings are they;
In the noble fellowship of the Just, I too walked in their way.
Tamil Meaning:
நடுவுநிலைமையிற் பிறழாதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவர் வழியிலே நிற்கின்றேன்.Special Remark:
ஞானம் பெறுதல் இறுதியிற் கூறற்பாலதாயினும், சிறப்புப்பற்றி முன்னர்க் கூறினார். அதனை எதிர்மறை முகத்தாற் கூறியது, `துறவறத்திற்கு முதலாகிய அருளுடைமைக்கு நடுவு நிலைமை இன்றியமையாச் சிறப்பிற்று` என்பது உணர்த்தற்கு. அது,தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 251
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான், என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். -குறள் 318
என்றாற்போல்வனவற்றால் அறியப்படும். உம்மைகள் எச்ச உம்மைகள்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage