ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
    சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
    சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
    சிவசிவ மாகும் திருவரு ளாமே.
  • 2. சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
    சிவசிவ என்னச் சிவகதி தானே.
  • 3. செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புறம்
    மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
    துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
    நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.