
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
பதிகங்கள்

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.
English Meaning:
Chant Siva Siva and Receive GraceThey who chant not ``Siva Siva,``
Are from ignorance freed not
Verily are they beings dumb;
Do say ``Siva Siva``
Unintermittent and spontaneous,
In the depths of your heart;
They who thus chant
Are in Siva Jnana Pure;
Theirs shall be the Grace Divine.
Tamil Meaning:
முன் அதிகாரத்திற் கூறிய மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை மட்டுமே மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இடைவிடாது கணித்தல் சிறப்புடைத்து` என்பதைத் தெளிய மாட்டாதவர் அவ்வாறு கணியாமையால், பேசும் வன்மையிருந்தும் அஃது இல்லாத ஊமரேயாவர். அம்மந்திரத்தைக் கணிக்கும் தெளிவினுள் நிற்பவர்கள் அதனால் அடங்க, ஆன்ம போதமும் அடங்கச் சிவம் ஆதற்குரிய திருவருள் நிலை வாய்க்கப் பெறுவார்கள்.Special Remark:
இது மேற்கூறிய அதிசூக்குமத்தினும் சூக்குமம் ஆதலின் காரண பஞ்சாக்கரமாம். ``சிவ சிவ`` என்றது இரண்டெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும் முறையைக் கூறியது; நான் கெழுத்தைக் கூறியதன்று. இதன்பின் `சிறப்புடைத்து` என்பது வருவிக்க. `இம்மந்திரக் கணிப்பால் வாயு (பிராணவாயு) அடங்கும்` என்றதனால் இவ்விரண்டெழுத்தும் முறையே இரேசக பூரக எழுத்துக்களாய் அசபா மந்திரமாய்ப் பயன்படுதல் குறிக்கப்பட்டது. மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. சிவ சிவ ஆய தெளிவு - `சிவ சிவ` என்றலே உறுதி பயக்கும் எனத் தெளிந்த தெளிவு. இரண்டாம் அடியில் `சிவசிவவாய்` எனவும் ஈற்றடியில் `சிவவாய்` எனவும் மூன்றாம் உருபு விரிக்க. ஆகும் திருவருள் ஆம் - ஆதற்கு ஏதுவாகிய திருவருள் உண்டாகும்.இதனால், அதி சூக்குமத்தினும் சுக்குமமாகிய காரண பஞ்சாக்கரம் இது` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.
`சிவ` என்பதைத் தொடர்ந்து உச்சரித்தால் `வசி` என வருதல் பற்றி, `வசி` என்பதே காரண பஞ்சாக்கரம் எனக் கூறுவாரும் உளர். அவர்,
``கலந்தருள் பெற்றது மாவசியே;
காழி அரனடி மாவசியே``3
என்னும் திருமுறையை எடுத்துக்காட்டி,
``நாலாய பூதமும், நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாம் என் றுந்தீபற``9
என்னும் திருவுந்தியார் `வசி` என்பதையே காண பஞ்சாக்கரமாகக் கூறிற்று என்பர். நாலாய பூதம் ஆகாயத்திலிருந்து எண்ண நான்காவது வாயு. அதன் பீசம் வகாரம். நாதம் சிவதத்துவ மூர்த்தி சிவன். அவனைக் குறிப்பது `சி` என்னும் எழுத்து. நாலாம் நிலை நின்மல துரியம், அல்லது சாயுச்சியம் என்பர்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage