ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
    சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
    சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
    சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.
  • 2. சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல்
    சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல்
    சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
    சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே.