
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்
பதிகங்கள்

சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே.
English Meaning:
SayujyamSayujya is the state of Jagra-Atita—the Beyond-Consciousness
Sayujya is to abide for ever in Upasantha
The peace that passes all understanding
Sayujya is to become Siva Himself,
Sayujya is to experience the infinite power of inward bliss,
Forever and ever.
Tamil Meaning:
சாயுச்சம், சீவன் முத்தி நிலையில் சாக்கிராதீதமாய் அமைதியிற்படுத்தி, சிவம் அன்றிப்பிறிதொன்றும் தோன்றாமல் சிவம் ஒன்றையே தோற்றுவித்து, அறிவின்கண் சிவனது குணமான எல்லையில் இன்ப வெள்ளத்தைத் தந்து நிற்கும்.Special Remark:
இவற்றைப் படிமுறையால் வேறு வேறு தொடராக ஓதினாரேனும் அவற்றை ஒருங்கெண்ணித் தொகுத்தல் கருத்து என்க. ``முடிவிலா`` என்பதனை ``ஆனந்தம்`` என்பதற்கு முன் கூட்டுக. மனம், கருவியாகுபெயர். குணத்தை ``சத்தி`` என்றார்.இதனால், சிவநெறியின் முடிந்த பயன் இம்மையிற்றானே பெறப்படுதல் கூறப்பட்டது.
``மூதறிவார்க்கு - அம்மையும் இம்மையே யாம்`` 1
என்பது திருவருட்பயன். இந்நிலை எய்தினாரையே, `சீவன்மூத்தர்`, எனவும், `அணைந்தோர்` எனவும் கூறுவர்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage