
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்
பதிகங்கள்

சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.
English Meaning:
Stages in the Soul`s PilgrimageIn the Soul`s Pilgrimage towards God
The Path of Saivam describes stages four;
It is Saivam, when the Self forges a kindred tie with Siva (in Saloka)
It is Saivam, when the Soul realizes itself and nears God (in Samipa)
It is Saivam, when it leaves Samipya (and reaches Sarupa)
It is Saivam when it enjoys the final bliss of Sivananda,
The inextricable union in Sayujya.
Tamil Meaning:
`சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறை வான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனை யன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறை வுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறி யின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.Special Remark:
மூன்றாம் அடியில், `சிவந் தன்னை` என ஓதுதல் பாடம் அன்று. இவ்வடியை, `சைவம் பசுபாசம் சாராமல் நீங்குதல் - (அல்லது) நீவுதல்` எனவும் ஓதுவர்.இதனால், `சிவநெறியின் முடிந்த பயன் சாயுச்சமே` என்பது பல்லாற்றானும் வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage