ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம்
    தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது
    அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர்
    இங்கிவ ராக இழிவற்ற யோகரே.
  • 2. சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
    சயிலமா தாகும் சராசரம் போலப்
    பயிலுங் குருவின் பதிபுக்க போதே
    கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.