ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
    கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
    கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
    வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
  • 2. ஆதித்தன் ஓடி அடங்கும் இடம்கண்டு
    சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
    பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
    ஆதித்த னோடே அடங்குகின் றாரே.
  • 3. உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
    சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை
    சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்(கு)
    உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.