ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
    தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
    மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
    பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.
  • 2. வளங்கனி தேடிய வன்தாட் பறவை
    உளங்கனி தேடி உழிதரும் போது
    களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
    நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.