ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
    முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
    வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
    சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.
  • 2. புருட னுடனே பொருந்திய சித்தம்
    அருவமொ டாறும் அதீதத் துரியம்
    விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
    அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.
  • 3. காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
    நாட்டி அழுத்திட நந்தியல் லால்இல்லை
    ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
    ஈட்டும் அதுதிடம் எண்ணலும் ஆமே.