
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
- இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
- இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
- இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
- இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
- இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
- இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்
- இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
- இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
- இரண்டாம் தந்திரம் - 10. திதி
- இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
- இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
- இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
- இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
- இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
- இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
- இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
- இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
- இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
- இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
Paadal
-
1. அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.
-
2. திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.
-
3. ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.
-
4. தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.
-
5. உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.
-
6. ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.