
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
பதிகங்கள்

வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.
English Meaning:
Vision of SpaceGive up anger (Egoity)
As far as you can;
Direct your thoughts (Godward)
As far as it goes;
If with Lord`s Grace
You slumber (in contemplation)
Day and night,
Even mountains will break;
And you shall vision the Space interminable.
Tamil Meaning:
எந்தப் பொருள் மேலும் எழுகின்ற விருப்பத்தை வெல்லுங்கள்; வெறுப்பை ஒழியுங்கள்; உள்ளம் தூய்மையாகும். ஆனபின் அதனை இயன்ற அளவு திருவருளைப் பற்றியே இயங்கச் செய்யுங்கள். பின்பு அஃது அல்லும், பகலும் திருவருளையே சார்ந்து அமைதியுற்றிருக்கும். அப்பொழுது மலைக் குகையுள் அடைக்கப் பட்டவனுக்கு அந்தக் குகை வெடித்துப் பெரிய விடுதலை கிடைத்தது போன்ற ஒருநிலை உண்டாகும்.Special Remark:
`மலாவத்தைகள் நீங்கிப் பராவத்தை நிகழும்` என்றபடி. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதும் ஆயிற்று. இஃது ஒட்டணி.அளவு - அளாவுதல்; கலத்தல். அது விரும்புதலைக் குறித்தது. வெகுளி, `வெறுப்பு` என்னும் அளவாய் நின்றது. `விருப்பம் நீக்குதற்கு அரியது` என்பதுபற்றி அதனை, `வெல்லுமின்` என்றார். `தூங்கினால்` என்றதனால், தூங்குதல் பெறப்பட்டது. `வெல்லுதல், விடுதல், செலுத்துதல் எல்லாம் யோகத்தால் உளவாகும்` என்பதும், `அவை உளவாகவே நின்மலாவத்தை பராவத்தைகளில் செல்லுதல் கூடும்` என்பதும் கருத்து.
இதனால், கலவு செலவுகளில் நிகழும் சுத்தாவத்தையின் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage