ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
    சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
    சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
    பாலோக மில்லாப் பரனுறு ஆமே.
  • 2. சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
    சமய மனுமுறை தானே விசேடம்
    சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம்
    சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.
  • 3. பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
    பாசம் அருளான தாகும்இச் சாமீபம்
    பாசம் சிவமான தாகும்இச் சாரூபம்
    பாசங் கரைபதி சாயுச் சியமே.