
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
- ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
- ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
- ஆறாம் தந்திரம் - 4.துறவு
- ஆறாம் தந்திரம் - 5.தவம்
- ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
- ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
- ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்
- ஆறாம் தந்திரம் - 10. திருநீறு
- ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
- ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
- ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
Paadal
-
1. தவமிக் கவரே தலையாய வேடர்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.
-
2. பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்காம் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.
-
3. யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாகற்றுச் சுற்றம் சடையதொன்
றாகத்து நீறணி அங்கம் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.
-
4. காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.