
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்
பதிகங்கள்

தவமிக் கவரே தலையாய வேடர்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.
English Meaning:
True robe befits only true TapasvinsThe true tapasvins are the truly robed;
The sinful are but murderous hunters;
These are not for holy robe entitled;
None but tapasvins true deserve robe true.
Tamil Meaning:
அகத்துத் தவ உணர்வு மிகுந்தவரே புற வேடத்தால் உயர்த்துக் கூறப்படுவர். அகத்து அவ்வுணர்வில்லாது உலகியல் உணர்வு மிகுந்தோர் தவவேடம் புனையின் `உயிர் கொலையை மிகச் செய்யும் வேடர்` எனப் பொருள் படுமாறு இருபொருட் சொல்லாக `வேடர்` எனச் சொல்லப்படுவர். அவர் வேட மாத்திரையால் தவத்தோர் ஆகார் ஆதலின், தவ உணர்வுமிகுந்தவர்க்கல்லது, தவ வேடத்தைத் தாங்கிநிற்றல் பொருந்தாது,Special Remark:
``தலையான வேடர்`` என்றாராயினும், `வேடத்தால் தலையானவர்` என்றலே கருத்தாதல் அறிக.`தவ உணர்வு இல்லாதார் தவ வேடம் புனையின் இகழப்படுவர்` என்பது இரண்டாம் அடியில் கூறப்பட்டது, மூன்றாம் அடியில், `வேடத்தால்` என உருபு விரிக்க. ``ஆகார்`` என்பதற்குமுன் `தவத்தோர்` என்பதும், பின் `ஆகலான்` என்பதும் எஞ்சிநின்றன.இதனால், `தவவேடம் தவ உணர்வு உடையோர்க்கே உரியது` என்பது, `அதனைத் தாங்குதல் அவர்க்கு மிக்க சிறப்பைத்தரும்` என்பதும் கூறப்பட்டன. இதனுள் ஈரிடத்தும் `தவத்தோர்` என்னாது, ``தவம்மிக்கவர்`` என்றே அருளிச் செய்த குறிப்பு நோக்கற்பாலது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage