
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
பதிகங்கள்

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.
English Meaning:
The Truly LiberatedThree the blemishes
That harass Jiva alike,
And in darkness enveloped
He lies in stupor;
They who are from them liberated
Are the truly liberated;
Others, entangled in them,
Surely perish.
Tamil Meaning:
உயிர்களை எப்பொழுதும் வருத்துவனவாய் மூன்று குற்றங்கள் உள்ளன. அதனால் ஆணவத்தின் சத்தி முற்றும் மடங்காது செயற்பட, சில வேளைகளில் ஒன்றை மற்றொன்றாக உணர்ந்தும், சில வேளைகளில் எதனையும் அறியாதே கிடந்தும் உயிர்கள் துன்புறு கின்றன. ஆகவே அம்முக்குற்றம் நீங்கப்பெற்றவரே துன்பத்தை நீக்கினவர் ஆகின்றனர். நீங்கப் பெறாதவர் அக்குற்றங்களில் கிடந்து கெடும் முறைமையை உடையவர் ஆவர்.Special Remark:
`மூன்று குற்றங்கள் இவை` என்பது வருகின்ற மத்திரத்தால் கூறப்படும். ``மான்று`` என்பதும் `மயங்கி என்றதே யாயினும் அது திரிபுணர்வையும், மயங்கி என்பது யாதும் அறியாமை -யையும் குறித்தன. ``ஆறு`` என்பதன்பின், `உடையர்` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது.இதனால், `உயிர்களின் துன்பத்திற்குக்காரணம் முக்குற்றம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage