
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
பதிகங்கள்

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.
English Meaning:
Dangers None if Breath Runs High in Right NostrilOn Thursdays menacing trident is in direction south;
Little effect Sula has
If breath to Left flows low,
No harm befalls if Right dominates;
Much good may actually swell.
Tamil Meaning:
வியாழக்கிழமையில் சூலம் இருக்கும் திசை தெற்காகும். சிவபெருமானுடைய சூலம் (பயணம் செய்பவனுக்கும், யோகிக்கும்) இடப் பக்கத்திலும், பிற்பக்கத்திலும் இருப்பின் ஏற்புடையதாகும். ஆகவே, அப்பொழுது அவர்கட்குத் தீங்கு இல்லை. வலப் பக்கத்திலும், முற்பக்கத்திலும் இருப்பின் தீங்கு மிக விளையும்.Special Remark:
அக்கு அணி - எலும்பை அணிந்தவன். உம்மை இரண்டும் அசைநிலைகள். `சூலம் இடம் பின் ஆகில் ஆம்; துக்கம் இல்லை` எனவும், வலம் முன் தோன்றிடில் மிக்கதாகிய மேல்வினை மேன்மேல் விளையும் எனவும் கூட்டி வினை முடிவுசெய்க.இவ் இரண்டு திருமந்திரங்களாலும் கூறப்பட்ட பொருள்கள் சோதிட நூல்களிலும் இவ்வாறே கூறப்படுகின்றன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage